கோவை : கோவையில் தாய், தங்கை கொலை வழக்கில் செய்யப்பட்ட வழக்கில் கைதான இளைஞருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நீதிமன்ற உத்தரவுபடி காவல்துறையின் பாதுகாப்புடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

கோவை - அவிநாசி சாலை அருகே உள்ள போலீஸ் பயிற்சிக்கல்லூரி எதிரே வசித்து வந்தவர்கள் பாப்பாத்தி (67) மகள் கீதா(43) மற்றும் மகன் சரவணக்குமார்(39). கடந்த 2016-ம் ஆண்டு பாப்பாத்தி, கீதா ஆகியோர் மர்மமான நிலையில் உயிரிழந்து கிடந்தனர். இதையடுத்து, பந்தய சாலை போலீசார் நடத்திய விசாரணையில், தாய் மற்றும் சகோதரியை சரவணக்குமார் கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், சரவணக்குமார் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். பண விவகாரம் தொடர்பாக தாய், சகோதரியை கொலை செய்ததை சரவணக்குமார் போலீஸாரிடம் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவருக்கு லேசான மனநிலை பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து, நீதிமன்றம் உத்தரவின் பேரில், அவருக்கு கடந்த இரண்டு வாரங்களாக கோவை அரசு மருத்துவமனையில் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதால், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். அங்கு போலீஸார் கண்காணிப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.