பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பெண்கள் யாராவது தற்கொலை செய்துள்ளனரா..? என்ற கோணத்தில் விசாரிக்க சி.பி.ஐ. திட்டம்

கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது தற்கொலை செய்து கொண்டனரா..? என்ற கோணத்தில் சி.பி.ஐ. போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது தற்கொலை செய்து கொண்டனரா..? என்ற கோணத்தில் சி.பி.ஐ. போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்த குமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கானது பொள்ளாச்சி காவல் நிலைய விசாரணையிலிருந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும், போலீசார் கைது செய்யப்பட்டுள்ள அனைவரின் மீதும் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கையும் இணைத்தனர். பின்னர், பல்வேறு கோரிக்கைகளுக்கு பின் இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ. போலீசார் கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அந்தந்த காவல்நிலையங்களுக்கு கூட தகவல் தெரியாதபடி மறைமுகமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அதேபோல, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள தனியார் மருத்துவமனைகளில் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றவர்களில் பட்டியலையும் நோயாளிகளின் விவரங்களையும் பெற்றுச் சென்றுள்ளனர். அந்தப் பட்டியலில் இளம் பெண்கள் யாராவது தற்கொலை முயற்சி செய்திருக்கிறார்களா..?, தற்கொலை செய்து உள்ளார்களா..? மற்றும் அவர்கள் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களா..? என்ற கோணத்தில் சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...