கோடை வெப்பத்தை தணித்து குளுகுளு காலநிலையை கொடுத்த மழை : மேட்டுப்பாளையம் மக்கள் மகிழ்ச்சி

கோவை : மேட்டுப்பாளையத்தில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


கோவை : மேட்டுப்பாளையத்தில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த சில மாதங்களாகவே வெயில் வாட்டி வந்த நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்கியதுடன் வெயிலின் தாக்கமும் மிக கடுமையாக இருந்தது. காலை 11 மணி முதல் மாலை வரை பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் வெளியே நடமாட முடியாமல் தவித்து வந்தனர். நீலகிரி மலை மாவட்ட அடிவாரப் பகுதியாக இருந்தும் கூட அங்கு மழை பெய்யும் போது, இங்கும் அதன் தாக்கம் இருக்கும். ஆனால், இந்தாண்டு அது முற்றிலும் மாறுபட்டு, மேட்டுப்பாளையம் மழையின்மையால் கடுமையாக வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேட்டுப்பாளையத்தின் புறநகர் பகுதிகளில் மழையினாமையால் வறட்சி ஏற்பட்டதுடன், கால்நடை மேய்ச்சல் நிலங்களில் முற்றிலும் வறண்டு காய்ந்து கிடந்தது. 



இந்த நிலையில், இன்று மாலை கருமேகம் சூழ்ந்து கடுமையான இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரமாக மழை கொட்டி தீர்த்தது. இடை விடாது ஒரு மணி நேரமாக வெளுத்து வாங்கிய மழை காரணமாக சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. கடுமையான வெயிலின் தாக்கத்தால் அவதியடைந்த பொதுமக்கள் இன்று பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...