3-வது அணியை மீண்டும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக சென்னையில் இன்று மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசுகிறார்.

பல்வேறு கட்டங்களாக நடந்து வரும் மக்களவை தேர்தலில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக 3-வது அணியை உருவாக்க பல்வேறு மாநில எதிர்கட்சிகள் முயற்சி செய்தன. தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் 3-வது அணியை அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டினார். தேர்தலுக்கு முன்பே இது தொடர்பான முயற்சிகளில் அவர் வேகம் காட்டினார். சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை கடந்த சில மாதங்களுக்கு முன்பே சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார். ஆனால் தேர்தலுக்கு முன்னர் 3-வது அணி முழுமை அடையவில்லை.
இந்த நிலையில், தெலுங்கானா முதலமைச்சரான சந்திரசேகர ராவ் 3-வது அணியை அமைக்கும் முயற்சியில் மீண்டும் தீவிரம் காட்டி வருகிறார். சென்னையில் இன்று மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். இதற்காக தனி விமானத்தில் சந்திரசேகர ராவ் இன்று சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு செல்லும் அவர், மாலை 4.30 மணி அளவில் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.
இந்த சந்திப்பின்போது தேர்தலுக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கிறார்கள். 3-வது அணி பற்றியும் ஆலோசிக்கிறார்கள். மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு சந்திரசேகர ராவ் மேலும் பல தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்றுள்ளது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் ஏற்கனவே முன்மொழிந்துள்ளார். எனவே,காங்கிரஸ் அல்லாத 3-வது அணியில் தி.மு.க. இடம்பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இதனால்,இன்றைய இருவரது சந்திப்பும் மரியாதை நிமித்தமான சந்திப்பாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்