மு.க. ஸ்டாலினை இன்று மாலை சந்திக்கிறார் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் : 3-வது அணியை ஒருங்கிணைக்க மீண்டும் முயற்சி

3-வது அணியை மீண்டும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக சென்னையில் இன்று மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசுகிறார்.

3-வது அணியை மீண்டும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக சென்னையில் இன்று மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசுகிறார்.

பல்வேறு கட்டங்களாக நடந்து வரும் மக்களவை தேர்தலில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக 3-வது அணியை உருவாக்க பல்வேறு மாநில எதிர்கட்சிகள் முயற்சி செய்தன. தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் 3-வது அணியை அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டினார். தேர்தலுக்கு முன்பே இது தொடர்பான முயற்சிகளில் அவர் வேகம் காட்டினார். சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை கடந்த சில மாதங்களுக்கு முன்பே சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார். ஆனால் தேர்தலுக்கு முன்னர் 3-வது அணி முழுமை அடையவில்லை.

இந்த நிலையில், தெலுங்கானா முதலமைச்சரான சந்திரசேகர ராவ் 3-வது அணியை அமைக்கும் முயற்சியில் மீண்டும் தீவிரம் காட்டி வருகிறார். சென்னையில் இன்று மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். இதற்காக தனி விமானத்தில் சந்திரசேகர ராவ் இன்று சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு செல்லும் அவர், மாலை 4.30 மணி அளவில் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பின்போது தேர்தலுக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கிறார்கள். 3-வது அணி பற்றியும் ஆலோசிக்கிறார்கள். மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு சந்திரசேகர ராவ் மேலும் பல தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்றுள்ளது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் ஏற்கனவே முன்மொழிந்துள்ளார். எனவே,காங்கிரஸ் அல்லாத 3-வது அணியில் தி.மு.க. இடம்பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இதனால்,இன்றைய இருவரது சந்திப்பும் மரியாதை நிமித்தமான சந்திப்பாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...