திருப்பூரில் பள்ளி குழந்தைகளுக்கு பனை ஓலை மூலம் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி முகாம்

திருப்பூர் : தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கான பனை ஓலையால் கைவினைப்பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

திருப்பூர் : தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கான பனை ஓலையால் கைவினைப்பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. 

பொதுத்தேர்வுகள் முடிவுற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அவற்றை மாணவர்கள் பயனுள்ளதாக மாற்றும் வகையில் தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் வாரந்தோறும் இலவச கோடைகால பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக, இந்த வாரம் குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்ச்சியும், பனை ஓலை மூலம் பொம்மைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் தயார் செய்யும் பயிற்சி முகாமும் நடைபெற்றன. குழந்தைகளிடம் கதைகளின் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், இசை மற்றும் பாடல்கள் மூலம் கதை சொல்லப்பட்டது. அதேபோல, பனை ஓலைகள் மூலம் குழந்தைகள் தாங்களாகவே தங்களது விளையாட்டுபொருட்களை தயார் செய்யும் பயிற்சியும் வழங்கப்பட்டது. இதில், மாணவர்கள் காற்றாடி, கண் கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆர்வத்துடன் செய்து அசத்தினர்.



Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...