கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும், பொள்ளாச்சியில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்தும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியின் சார்பில் தடையை மீறி இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
அப்போது, போராட்டக்காரர்கள் பேசியதாவது :- பொள்ளாச்சியில் டாஸ்மாக் பார் தாக்கப்பட்டது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இரண்டு ஆண்டுகளாக அந்த பார் அனுமதியின்றி நடைபெற்று வந்துள்ளது. கோவை மாவட்ட காவல்துறையினர் இந்த வழக்கை மெத்தனமாக கையாண்டு இருக்கின்றனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது திருநாவுக்கரசு வீட்டை சோதனையிடும் போது, இத்தனை நாட்கள் பொள்ளாச்சி போலீசார் அந்த வீட்டை சோதனை ஏன் செய்யவில்லை, என கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல, பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்தது தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய த.பெ.தி.க.,வினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.