‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்பும் விளக்கங்களை அளிப்பதை தவெக அரசு கைவிட்டு, நிர்வாகத் திறனிலும் தீர்வுகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.


கோவை: தமிழகத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டு மற்றும் அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, தவெக அரசை முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “மாற்றத்தைத் தருவேன்” என்ற வாக்குறுதியை முன்வைத்து ஆட்சிக்கு வந்த தவெக அரசு, பதவியேற்று ஒரு மாதம் ஆகிய நிலையிலும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நேரங்களிலும் மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில், மின்வெட்டு தொடர்பாக முதலமைச்சர் விளக்கம் அளிக்காமல் மவுனம் காக்கிறார் என்றும், மின்துறை அமைச்சர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக பல்வேறு காரணங்களை முன்வைத்து திசைதிருப்பும் முயற்சிகளில் ஈடுபடுகிறார் என்றும் விமர்சித்துள்ளார்.

மின்வெட்டுக்கு காரணமாக “ஃபியூஸ் கேரியர் திருட்டு”, “ஹார்ட் டிஸ்க் மாயம்”, “மின்வாரிய பணியாளர்களின் சதி” போன்ற விளக்கங்களை அமைச்சர் தெரிவித்ததை சுட்டிக்காட்டிய செந்தில் பாலாஜி, இத்தகைய காரணங்கள் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு உரிய பதிலை அளிக்கத் தவறுவதாகவும், நிர்வாகத் திறமையின்மையை மறைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தமிழகத்தின் மின் தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வந்த போதிலும், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சீரான மின்சாரம் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டில் 16,481 மெகாவாட் இருந்த உச்ச மின் தேவை, 2026ஆம் ஆண்டு ஏப்ரலில் 20,974 மெகாவாட்டாக உயர்ந்த போதிலும், பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் மின்சார விநியோகம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டதையும், மின்வாரியத்தின் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் துணை மின் நிலையங்கள், மின்வழித்தடங்கள் மற்றும் 90 ஆயிரம் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, மின்வெட்டு பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் நிம்மதியாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அரசின் கவனம் விளக்கங்களிலும் எதிர்வினைகளிலும் அல்லாமல் நிர்வாகத் திறனிலும் தீர்வுகளிலும் இருக்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...