திருப்பூர் : திருப்பூரில் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில், பொள்ளாச்சியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரிடம் உரிய ஆவணம் இல்லாத 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் : திருப்பூரில் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில், பொள்ளாச்சியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரிடம் உரிய ஆவணம் இல்லாத 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூரில் இருந்து பொள்ளாச்சியைச் சேர்ந்த லோகநாதன், தனது மனைவியின் மருத்துவ செலவிற்காக ரூ. 10 லட்சம் பணத்தை பொள்ளாச்சி கொட்டம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு காரில் கொண்டு சென்றுள்ளார். பல்லடம் - பொள்ளாச்சி சாலை பாரதி வித்தியாலயம் பள்ளி அருகில் சென்று கொண்டு இருந்த போது, அங்கு ப.மணி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் அவரது காரை மடக்கி சோதனை நடத்தினர்.

சோதனையில் லோகநாதனின் காரில் ரூ. 10 லட்சம் பணம் இருந்துள்ளது. இந்த பணம் சம்பந்தமாக உரிய ஆவணங்கள் இல்லாததால், காருடன் அந்த பணத்தை பல்லடம் வட்டச்சியர் சாந்தியிடம் தேர்தல் படையினர் ஒப்படைத்தனர்.