கோடநாடு குற்றவாளிகள் சயான், மனோஜ் இன்று மீண்டும் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்

நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு குற்றவாளிகள் சயான், மனோஜ் ஆகியோர் உதகை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு குற்றவாளிகள் சயான், மனோஜ் ஆகியோர் உதகை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.



நீலகிரி மாவட்டம் உதகை செசன்ஸ் நீதிமன்றத்தில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு நடைபெற்று வருகிறது . கடந்த பிப்ரவரி 8-ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, முக்கிய குற்றவாளிகளான சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிபதி வடமலை இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்தார். உடனே குற்றவாளிகள் தலைமறைவாகினர். இதற்கிடையே சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் வக்கீல் இருவரையும் கைது செய்ய தடைக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இதனை விசாரித்த நீதிபதி, அவர்கள் இருவரையும் 4 தினங்களுக்கு கைது செய்ய தடை விதித்தார். பின்னர், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தீர்ப்பை ஒத்தி வைப்பதாக நீதிபதி வடமலை கூறினார்.



இந்த நிலையில், கோத்தகிரி போலீசார் நேற்று சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை திருச்சூரில் கைது செய்து, இரவு 10 மணிக்கு உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, சயான் தரப்பு வழக்கறிஞர் செந்தில், உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின் போது, இறுதி தீர்ப்பு வரும் வரை இவர்களை கைது செய்ய மாட்டோம் என்று அரசு வழக்கறிஞர் உறுதி அளித்துள்ள நிலையில், தற்போது குற்றவாளிகளை கைது செய்தது தவறு என்று வாதிட்டார். இதற்கு அரசு வழக்கறிஞர் பால நந்தகுமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி வடமலை, நேற்று ஒருநாள் இரவு மட்டும் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும், மீண்டும் இன்று காலை  அவர்களை ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...