கோவையில் பிரதம மந்திரியின் நிதியுதவி திட்டத்தின் கீழ் 100 விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் : மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

கோவை : பிரதமரின் கிசான் சம்மான் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 100 விவசாயிகளுக்கு முதல் தவணைக்கான ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி வழங்கினார்.

கோவை : பிரதமரின் கிசான் சம்மான் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 100 விவசாயிகளுக்கு முதல் தவணைக்கான ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி வழங்கினார். 



சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்தும் நோக்கில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி, நாட்டில் உள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவையில் இந்த திட்டத்தினை தொடங்குவதற்கான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில், மாவட்ட ஆட்சியர் கு.ராசமணி 100 விவசாயிகளுக்கு முதல் தவணைக்கான ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான ஆணையினை வழங்கினார். இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) கோவிந்தராஜ், மகளிர் திட்ட அலுவலர் செல்வராசு, இணை இயக்குநர் (வேளாண்மை) பானுமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சிவசுப்பிரமணியம், தோட்டக்கலை துணை இயக்குநர் ஜி.கே.உமாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இதில், மாவட்ட ஆட்சியர் பேசியதாவது ;- சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டமே பிரதம மந்திரி சம்மான் நிதி திட்டம். இந்த திட்டத்தின் நோக்கமே, சிறு, குறு விவசாயிகளின் வருவாய் ஆதாரத்தை ஊக்குவிப்பதே. இது விவசாயிகளின் இடுபொருள் செலவினத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. இதில், வழங்கப்படும் கூடுதல் நிதி விவசாயிகளின் பயிர் மற்றும் மகசூலை மேம்படுத்தி அவர்களின் வருமானத்தை உயர்த்தும். 

ஆகையால், சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காக ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இந்நிதியானது நான்கு மாதங்களுக்கு ஒரு முறையென மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இதனுடைய முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்படுகிறது. இதையடுத்து, கோவையில் 100 விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இத்தொகையானது அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 

கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இதுவரையில் சுமார் 69,000 மனுக்கள் பெறப்பட்டன. அதில், தகுதியான 36,016 விவசாயிகளின் மனுக்கள் ஏற்கப்பட்டு, இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் முதல் தவணை ரூ.2,000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், 5 ஏக்கருக்குள் நிலம் கொண்டுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் முறையான ஆவணங்களைச் சமர்பித்து, தொடர்ந்து இத்திட்டத்தின்கீழ் பயன் பெறலாம். 

மேலும், இத்திட்டத்தில் விடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இரண்டாம் கட்டமாக, வருகின்ற 1ம் மற்றும் 2ம் தேதிகளில் நிதி கொடுக்கப்படவுள்ளது. எனவே, விடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் அருகிலுள்ள கிராம நிர்வாக அலுவலரையோ, வேளாண்மை அலுவலகத்தினையோ அணுகி இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு பயன்பெறலாம், இவ்வாறு அவர் பேசினார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...