காஷ்மீரில் தற்கொலைப் படையினரால் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த அழைப்பு

கோவை : கோவை, ரேஸ் கோர்ஸில், காஷ்மீரில் தற்கொலைப் படையினரின் தாக்குதலால் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மெழுவர்த்தி ஏந்தி இன்று மாலை அஞ்சலி செலுத்தப்படுகிறது.


கோவை : கோவை, ரேஸ் கோர்ஸில், காஷ்மீரில் தற்கொலைப் படையினரின் தாக்குதலால் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மெழுவர்த்தி ஏந்தி இன்று மாலை அஞ்சலி செலுத்தப்படுகிறது. 

நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலத்தில், புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது எதிரே வெடிகுண்டுகளுடன் வந்த கார் மோதியது. இந்த தாக்குதலில், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 44 பேர் பலியாகினர். தன்னலமில்லாத ராணுவ வீரர்களின் இறப்புக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தியும், கண்டன போராட்டம் நடத்தியும் வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக, கோவை, ரேஸ் கோர்ஸ் சி.எஸ்.ஐ சர்ச்சின் முன்பாக, ஜமாத் ஈ இஸ்லாமி ஹிந்த், கோவை மாவட்ட ஒருங்கிணைந்த ஜமாத், சிறுதுளி உள்ளிட்ட பல அமைப்புகள் இணைந்து, நாட்டுக்காக தன்னுயிர் துறந்த வீரர்களுக்கு மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தவுள்ளனர். இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வில், பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது. மேலும், அஞ்சலி செலுத்த வருபவர்கள் மெழுகுதிரிகளை எடுத்து வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...