18-ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்

கோவை : பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து வரும் 18-ம் தேதி முதல் ௩ நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கோவை மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தெரிவித்தனர்.

கோவை : பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து வரும் 18-ம் தேதி முதல் 3 நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கோவை மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தெரிவித்தனர்.



3-வது ஊதிய உடன்பாடு, பென்சன் மாற்றம், 4ஜி அலைகற்றை நாடு முழுவதும் விரிவுபடுத்தி வேகப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்,என்.எல் ஊழியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் ரயில் நிலையம் அருகில் உள்ள அலுவலகத்தில் இருந்து பந்தய சாலை வரை ஊர்வலமாக சென்றனர்.



பின்னர் இது குறித்து அவர்கள் கூறியதாவது :- இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். சிறப்பான முறையிலும், பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால், இதனை மேம்படுத்த மத்திய அரசு எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் புறக்கணிக்கிறது. மேலும், தனியார் நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகளில் இருந்து பெருமளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது. குறைவான கடனில் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கடனை சரிசெய்ய வங்கிகளில் கடன் பெற அரசாங்கம் தடை விதித்து உள்ளது.



நாடு முழுவதும் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு விட்டாலே கடன் சுமை குறையும். இதற்கான முன்மொழிவை அனுப்பி பல மாதங்களாகியும், ஒப்புதல் தராமல் மத்திய அரசு காலதாமதம் செய்து வருகிறது. பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும், இதுவரை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து வரும் 18-ம் தேதி முதல் மூன்று நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம், எனத் தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...