திருப்பூர் அலகுமலையில் தீண்டாமை வேலி அகற்றம் : வரவேற்பும்...எதிர்ப்பும்....

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் அமைக்கப்பட்ட தீண்டாமை வேலி சார் ஆட்சியர் முன்னிலையில் அகற்றப்பட்ட நிலையில், இதற்கு இந்து முன்னனியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் அமைக்கப்பட்ட தீண்டாமை வேலி சார் ஆட்சியர் முன்னிலையில் அகற்றப்பட்ட நிலையில், இதற்கு இந்து முன்னனியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் அலகுமலையில் நூற்றாண்டு பழமைவாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சன்முகம் தலைமையில் சிலர் கடந்த 15-ம் தேதியன்று கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை சுற்றி இரும்பு முள்வேலி அமைத்தனர். இந்த நிலையில், பல ஆண்டுகளாக இந்நிலத்தை பொதுவழித்தடமாக பயன்படுத்தி வந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நடைபாதை அடைக்கப்பட்டதால் இரண்டு கிலோமீட்டர் தொலைவு வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பொதுவழித்தடத்தை பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்து சமய அறநிலைத்துறையினர் இந்த நடிவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைக்கப்பட்ட இந்த கம்பிவேலி தீண்டாமை வேலி என கூறியும், அதனை அகற்றக்கோரியும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த வாரம் மனு அளிக்கப்பட்டது. 



இதனையடுத்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வரும் ஞாயிறன்று பொங்கலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இன்று திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியர் ஷர்வன்குமார் தலைமையிலான வருவாயித்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று தாழ்த்தப்பட்ட மக்கள் பயண்படுத்தி வந்த காங்கீரீட் சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேலியினை அகற்றினர்.மாவட்ட நிர்வாகத்தின் இந்த செயலுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியினர் வரவேற்பு தெரிவித்து வருகின்ற 4 ஆம் தேதி நடத்த இருந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். 



இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட பகுதி பொதுமக்களின் நடைபாதையில் அமைக்கப்பட்ட கம்பி வேலியை அகற்றியதற்காக இந்து முன்னனி எதிர்ப்பு தெரிவித்து சார ஆட்சியர் ஷ்ரவண் குமாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரகத்தில் இந்து முன்னனியினரோடு மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளுடனான கூட்டத்திற்கு இந்துமுன்னனியினரை பேச்சுவார்த்தைக்கு வரச்சொல்லியதை அடுத்து இந்து முன்னனியினர் கலைந்து சென்றனர். இதனையடுத்து இந்து முன்னனியினரின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையிலான இந்து முன்னனியினர் ஏராளமானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



சம்பவ இடத்தில் போரட்டக்காரர்களிடம் பேசிய சார் ஆட்சியர், மாவட்ட நிர்வாகத்திடம் எந்த அனுமதியும் பெறாமல் கம்பி வேலி அமைத்ததாகவும், அதனால், சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இது அறநிலையத்துறைக்கு சொந்தமான இடமல்ல, கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட இடம் எனவும் தெரிவித்தார்.


Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...