பராமரிப்புப் பணியின் போது அடுத்தடுத்து மின்கம்பங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர்: திருப்பூர் அருகே மின் பராமரிப்புப் பணியின் போது அடுத்தடுத்து இரு மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் அருகே மின் பராமரிப்புப் பணியின் போது அடுத்தடுத்து இரு மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



குமரன் சாலையில் இன்று காலை முதல் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதனால், குமரன் சாலை, கோர்ட் வீதி ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டிருந்தன. குமரன் சாலையில் உள்ள ஒரு உயர் மின்கம்பத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்த போது, திடீரென அச்சாலையில் இருந்த மின்கம்பங்கள் அடுத்தடுத்த சாயத் தொடங்கின. இதையடுத்து, உடனடியாக அந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. 



பின்னர்,  உடனடியாக வந்த மின்வாரிய ஊழியர்கள் அப்பகுதி முழுவதும் மின்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தி, மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால், திருப்பூர் நகரின் முக்கிய சாலையான குமரன் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், நகரப் பகுதி முழுவதும் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமமடைந்தனர்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...