திருப்பூர்: திருப்பூர் அருகே மின் பராமரிப்புப் பணியின் போது அடுத்தடுத்து இரு மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குமரன் சாலையில் இன்று காலை முதல் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதனால், குமரன் சாலை, கோர்ட் வீதி ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டிருந்தன. குமரன் சாலையில் உள்ள ஒரு உயர் மின்கம்பத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்த போது, திடீரென அச்சாலையில் இருந்த மின்கம்பங்கள் அடுத்தடுத்த சாயத் தொடங்கின. இதையடுத்து, உடனடியாக அந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

பின்னர், உடனடியாக வந்த மின்வாரிய ஊழியர்கள் அப்பகுதி முழுவதும் மின்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தி, மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால், திருப்பூர் நகரின் முக்கிய சாலையான குமரன் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், நகரப் பகுதி முழுவதும் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமமடைந்தனர்.