திருப்பூர்: மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த 47 புதிய பேருந்துகளில் முதற்கட்டமாக 11 பேருந்துகளின் சேவையை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழக அரசால் வழங்கப்பட்ட புதிய பேருந்துகளின் தொடக்க விழா இன்று திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்திற்கு 47 புதிய பேருந்துகள் ஒதுக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக இன்று 11 பேருந்துகள் மட்டும் மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டது.

இந்த சேவையை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகள் திருப்பூரில் இருந்து திருச்சி, சேலம், கோவை, மதுரை மற்றும் பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. மேலும், மூன்று பேருந்துகள் அண்டை மாநிலமான கேரளாவுக்கு இயக்கப்படுகிறது.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்." என்று தெரிவித்தார்.