வனப்பகுதிகளில் இருக்கும் அரசுக்கு சொந்தமான வன ஓய்வறைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் அரசு பங்களாக்கள் மற்றும் வன ஓய்வறைகள் சட்டவிரோத செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரித்த நீதிபதிகள் மதன் பி. லோக்பூர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் :- வனப்பகுதிகளில் உள்ள அரசு ஓய்வறைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது. மேலும், வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதிகளில் தங்கி, ஆய்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக மட்டுமே இதுபோன்ற ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பழைய திட்டங்கள் மற்றும் தாழ்வானப் பகுதிகளில் அமைந்துள்ள அரசு வன ஓய்வறைகள் மற்றும் பங்களாக்களை உயர்த்திக் கட்டுவது போன்றவை உச்சநீதிமன்றம் அனுமதியுடன் செயல்படுத்த வேண்டும். வனப்பகுதிகளில் இருக்கும் இந்த அறைகளைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை. மேலும், வனப்பகுதிக்குள் மேற்கொள்ளப்படவிருக்கும் வசதிகளை மத்திய அதிகாரக்குழு பராமரிக்கும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.