திருப்பூர்: திருப்பூர் அருகே வெள்ளகோவில் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முத்தூர் சாலையில் ஜெயவேல் என்பவருக்கு சொந்தமான நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலையில் கழிவு பஞ்சுகளைப் பிரித்தெடுத்து நூலாக மாற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மதிய உணவு நேரத்தின் போது கழிவு பஞ்சுகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் இருந்து புகை வருவதை கண்ட தொழிலாளர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். எனினும் பஞ்சுகளில் பற்றிய தீயானது மளமளவெனப் பரவி கொழுந்து விட்டு எரிய துவங்கியது. இதனையடுத்து நூற்பாலையை விட்டு வெளியேறிய தொழிலாளர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான கழிவு பஞ்சுகள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமாயின. மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த வெள்ளகோவில் காவல் துறையினர், மின் கசிவு காரணமாகத் தீவிபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரித்து வருகின்றனர்.