இனி கிளை மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுத்தால் கோவை அரசு மருத்துவமனையிலேயே நகல் வாங்கலாம்

கோவை: கிளை மருத்துவமனைகளில் எடுக்கப்படும் சி.டி ஸ்கேன் மற்றும் அதன் விளக்க அறிக்கையை கோவை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் வகையில் டெலி ரேடியாலஜி முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கோவை: கிளை மருத்துவமனைகளில் எடுக்கப்படும் சி.டி ஸ்கேன் மற்றும் அதன் விளக்க அறிக்கையை கோவை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் வகையில் டெலி ரேடியாலஜி முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்ற ஸ்கேன்கள் விபத்து, மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஆகிய பல்வேறு பிரச்சினைகளுக்காக, அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோருக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்படி பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் துணை மருத்துவமனைகளில் சி.டி ஸ்கேன் வசதி உள்ளது.



அதேபோல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, உதகை அரசு மருத்துவமனை, திருப்பூர் அரசு மருத்துவமனை என அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் மற்றும் சில தாலுகாவில் உள்ள மருத்துவமனைகளிலும் சி.டி ஸ்கேன் எடுக்கும் வசதி உள்ளது.

ஆனால், எடுத்த சி.டி ஸ்கேன் அறிக்கையை தயாரிக்கவும், அதுபற்றிய விளக்கத்தை கூறவும் தற்போதைய நிலையில் அதற்கான நிபுணர்கள் இல்லாமல் ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் சி.டி ஸ்கேன் எந்த இடத்தில் எடுத்தாலும், அதற்கான அறிக்கையை பெற காலதாமதம் ஆகிறது. 

அதேபோல், சி.டி ஸ்கேன் அறிக்கை கிடைக்க காலதாமதம் ஆவதால் உரிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், உரிய சிகிச்சையை உரிய நேரத்தில் எடுக்கத் தவறுவதை சரி செய்யும் வகையில் தற்போது கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெலி ரேடியாலஜி என்ற ஸ்கீம் உருவாக்கப்பட உள்ளது. 

உதாரணத்திற்கு, பொள்ளாச்சியில் உள்ள மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் எடுத்தால் அதன் நகல் விபரம் உடனடியாக கோவையில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் தலைமை மருத்துவமனையில் உள்ள சி.டி ஸ்கேனை பரிசோதிக்கும் நிபுணர்கள் கொண்டு, அந்த நகல் ஆராயப்பட்டு பின்பு ஸ்கேன் பரிசோதனையின் அறிக்கை தயாரித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது தான் இந்த டெலி ரேடியாலஜி திட்டத்தின் நோக்கமாகும். 

இந்த திட்டத்தின் மூலம், ஆள்பற்றாக்குறையை சமாளிப்பதுடன், ஒருவர் விரைவில் தன்னுடைய பாதிப்புகள் பற்றி அறிந்துகொள்ளவும், அது தொடர்பான சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளவும் இந்த திட்டம் கைகொடுக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த திட்டத்தை உடனடியாக செயல் வடிவத்திற்கு கொண்டு வர, பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரியும் 24 மருத்துவர்களுக்கு திட்டம் தொடர்பான மென்பொருள் மற்றும் கணினி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 60 நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...