எஞ்சினியரிங் தரவரிசைப் பட்டியல் - கோவைக்கு பெருமை சேர்த்த மாணவியின் பேட்டி

கோவை: எஞ்சினியரிங் தரவரிசைப் பட்டியலில் தமிழக அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார் கோவையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா ரவி. இவர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து நமது கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார்.


கோவை: எஞ்சினியரிங் தரவரிசைப் பட்டியலில் தமிழக அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார் கோவையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா ரவி. இவர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து நமது கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார்.



தனது படிப்பு, எதிர்காலத் திட்டம் குறித்து கீர்த்தனா சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் கோவை மாவட்டம் சாயிபாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர். எனது தந்தை வெளிநாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அம்மா பாலக்காட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இதன் காரணமாக, நான் பாலக்காட்டில் உள்ள பி.எஸ்.எஸ். குருகுலம் பள்ளியிலேயே படித்து முடித்தேன். பிளஸ் 2 பொதுத்தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற்றேன். பிறகு எஞ்சினியரிங் படிப்புக்கு விண்ணப்பித்திருந்தேன். அதே நேரத்தில் எனக்கு டெல்லியில் உள்ள இன்பேன்ட் ஜீசஸ் கல்லூரியில் வேதியியல் துறையில் இடம் கிடைத்தது. தற்போது அங்கு தான் படித்து வருகிறேன். அடுத்தகட்டமாக என்ன செய்யலாம்? என்பதை இன்னும் முடிவெடுக்கவில்லை.

நான் இந்த மதிப்பெண் பெற முழு காரணம் எனது பள்ளி ஆசிரியர்கள் தான். தினமும் அங்கு சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டு படித்த காரணத்தால் தான் இந்த மதிப்பெண் பெற முடிந்தது. அடுத்து வரும் மாணவர்கள் சிரமப்பட்டு படிக்காமல், 'ஸ்மார்ட்'ஆக படித்தால் சுலபமாக இந்த மதிப்பெண் பெற முடியும்.

என்று கூறினார் கீர்த்தனா ரவி.

Newsletter

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...