24 மணிநேரக் குடிநீர் விநியோகத் திட்டம் மக்களுக்கான திட்டமல்ல : கோவையில் எம்.பி. கனிமொழி விமர்சனம்

கோவை : 24 மணி நேரக் குடிநீர் விநியோகத் திட்டம் மக்களுக்கான திட்டம் அல்ல தி.மு.க., மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.

கோவை : 24 மணி நேரக் குடிநீர் விநியோகத் திட்டம் மக்களுக்கான திட்டம் அல்ல தி.மு.க., மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, இறுதியாக கோவையில் நடைபெற்ற மாவட்ட தி.மு.க., மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.



முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் கூறியதாவது :- மக்களுக்கு குடிநீர் வழங்குவதை உறுதி செய்யவே 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போது சூயஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்த திட்டம் மக்களுக்கான திட்டம் அல்ல. அது அ.தி.மு.க.,வினர் தங்களை வளைமைபடுத்தி கொள்வதற்காகப் போடப்பட்ட திட்டமாகும். 

தமிழகத்தில் எந்த திட்டம் குறித்து விமர்சித்தாலும் கைது நடவடிக்கை என்பது எம்ர்ஜென்சியை காட்டிலும் மோசமான நிலையில் தமிழகம் இருப்பதைக் காட்டுகிறது. பத்திரிகையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில், அது குறித்து அரசியல் கட்சிகள் மட்டுமே பேசி வருகின்றனர். பெண்கள் வாழவே தகுதி இல்லாத நாடாக இந்தியா உருவாகி வருவது வேதனையளிக்கிறது. 

வளர்ச்சித் திட்டங்களை ஒருபோதும் தி.மு.க., எதிர்ப்பதில்லை. ஆனால், மக்களின் கருத்துக்களை கேட்காமல் 8 வழிச்சாலையை அமைத்தே தீருவோம் என அரசு பிடிவாதம் பிடிப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. 8 வழி பசுமை வழிச்சாலை திட்டம் மக்களுக்கு எதிரான திட்டமாக இருப்பதால் தான் தி.மு.க., அதனை எதிர்க்கிறது, இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...