லட்சுமி மில்ஸ் சிக்னலில் காத்துக்கிடந்த ஆம்புலன்ஸ் : போக்குவரத்தை சீர்ப்படுத்தாத போலீசார்

கோவை: போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தவறிய காவல்துறையினரால் கோவை லட்சுமி மில்ஸ் சிக்னலில் நோயாளியை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கோவை: போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தவறிய காவல்துறையினரால் கோவை லட்சுமி மில்ஸ் சிக்னலில் நோயாளியை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு இடம் கொடுக்க வேண்டிய கடமை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் உள்ளது. அதனினும் ஒருபடி மேலாக, ஆம்புலன்ஸ் 'சைரன்' சத்தம் கேட்டவுடன் துரிதமாக செயல்பட்டு, ஆம்புலன்ஸ் செல்வதற்காக பொறுப்பும், கடமையும் போக்குவரத்து போலீசாருக்கு உள்ளது. 



இந்த சூழலில், இன்று லட்சுமி மில்ஸ் சிக்னலில் போக்குவரத்து காவலர் பணியில் இருந்தும், அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்தித் தர தவறியுள்ளார். 

இதன் காரணமாக அந்த ஆம்புலன்ஸ் சிக்னலிலேயே சுமார் ஐந்து நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

விபத்து மற்றும் அவசர சிகிச்சைகளுக்காக நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொருட்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்குகிறது. ஒருவரை காப்பாற்ற முகாந்திரம் உள்ள நேரத்தினை மருத்துவர்கள் 'கோல்டன் ஹவர்ஸ்' என்று அழைப்பதுண்டு. அப்படியான பொன்னான நேரத்தை ஆம்புலன்சுகள் இப்படி சிக்னல்களிலேயே வீணாக்குகின்றன.

இதை காவல்துறை அதிகாரிகள் கருத்தில் கொண்டு, முனைப்புடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...