மரக்கடை பகுதியில் ரூ. 12 லட்சம் கொள்ளை: சி.சி.டி.வி., காமிராவையும் தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்

கோவை: மரக்கடை பகுதியில் உள்ள ஹார்டுவேர் கடை ஒன்றின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.12 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

கோவை: மரக்கடை பகுதியில் உள்ள ஹார்டுவேர் கடை ஒன்றின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.12 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

கோவை மரக்கடை பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேவாராம் என்பவர் மகாதேவ் ஹார்டுவேர் என்ற பெயரில் கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். நேற்று இரவு கடையின் உரிமையாளர் வழக்கம் போல கடையை பூட்டி சென்றுள்ளார்.



இந்நிலையில், இன்று கடையை திறக்க வந்த கேவாராம் கடை உடைக்கப்பட்டு பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் போலீசாரிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், சம்பவ இடத்திற்குச் சென்ற குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் கொள்ளையர்கள் கடையின் பின் புற கதவை உடைத்து கடைக்குள் நுழைந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அந்த கொள்ளையர்கள் கடைக்குள் இருந்த சி.சி.டி.வி., காமிராவையும் தூக்கிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...