மரக்கிளைகளுக்கு இடையே மரண பயத்தை ஏற்படுத்தும் மின்சாரக் கம்பிகள்

கோவை: பீளமேடு ரயில்நிலையம் அருகே உள்ள கரிகாளியம்மன் கோவில் கடைசி வீதியில் மரக்கிளைகளுக்கு இடையே செல்லும் மின் கம்பிகள் மழை, காற்று போன்ற இயற்கை சீற்றங்களால் அறுந்து நிலையில் உள்ளது. அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் மரக்கிளைகளை அப்புறப்படுத்தக் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை: பீளமேடு ரயில்நிலையம் அருகே உள்ள கரிகாளியம்மன் கோவில் கடைசி வீதியில் மரக்கிளைகளுக்கு இடையே செல்லும் மின் கம்பிகள் மழை, காற்று போன்ற இயற்கை சீற்றங்களால் அறுந்து நிலையில் உள்ளது. அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் மரக்கிளைகளை அப்புறப்படுத்தக் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை பீளமேடு ரயில்நிலையம் மற்றும் பீளமேடு மெயின் ரோடு செல்லவும் கரிகாளியம்மன் கோவில் வீதிகள் பிரதானமாக உள்ளது. ஐந்து வீதிகளை கொண்ட இத்தெருவில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இதில் கடைசி தெருவில் உள்ள சீனிபுளியங்காய் மரக்கிளைகள் மின்சாரக் கம்பிகள் மீது படர்ந்து செல்கிறது. 



இதனால் காற்று, மழை போன்ற காலங்களில் மரக்கிளைகளின் பாரம் தாங்காமல் கம்பிகள் அறுந்து கீழே விழுகின்றது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். குழந்தைகள் அதிகம் உள்ள அத்தெருவில் காலை, மாலை வேலைகளில் இது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டால் குழந்தைகள் தெரியாமல் மின் கம்பிகளை மிதிக்கும் சூழல் ஏற்படும், வாகனங்களில் செல்லும் மக்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும்.



இது குறித்து அப்பகுதியில் வசித்து வரும் இல்லத்தரசி ஜெயக்கவிதா கூறுகையில், "நான்கு ஆண்டுகளாக பீளமேடு துணை மின் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. மழைக் காலங்களில் குழந்தைகள் அறுந்து விழுந்த மின்கம்பிகளை மிதித்து விடுவார்களோ? என்கிற அச்சம் மிகுதியாக உள்ளது. உயிர் பலி போகும் முன் இந்த மரக்கிளைகளை அகற்றி மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

இது குறித்து மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "மரக்கிளைகளை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

Newsletter

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...