கோவையில் மூத்த பத்திரிக்கையாளர் அவனாசிலிங்கத்தின் 5-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

கோவை: கோவை மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் அவனாசிலிங்கம் 5-ம் ஆண்டு முதல் நினைவேந்தல் மற்றும் மறைந்த சேலம் தினகரன் நாளிதழின் ஆசிரியர் வெங்கடேசனின் பட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் அவனாசிலிங்கம் 5-ம் ஆண்டு முதல் நினைவேந்தல் மற்றும் மறைந்த சேலம் தினகரன் நாளிதழின் ஆசிரியர் வெங்கடேசனின் பட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. 

கோவை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பல்வேறு ஊடகங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். நிகழ்வில் அவனாசிலிங்கம் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் பத்திரிக்கையாளர்களுடன் பணியாற்றிய நினைவலைகளைக் குறித்து தீக்கதிர் நிருபர் பாபு, மூத்த பத்திரிக்கையாளர் அமுதா, தந்தி நாளிதழ் நிருபர் ஆசாத், சன் டிவி நிருபர் மார்டின் மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி, எழுத்தாளர் பாமரன் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.



பின்னர், நடைபெற்ற நிகழ்வில் மறைந்த சேலம் தினகரன் நாளிதழ் ஆசிரியர் வெங்கடேசன் திருவுருவ படத்தை, கோவை தினகரன் பதிப்பு ஆசிரியர் காளிதாஸ் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி ஆகியோர் திறந்து வைத்தனர். இதன் பின்னர், அவனாசிலிங்கம் அறக்கட்டளை சார்பில் மூன்று மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையும், ஒருவருக்கு மருத்துவ உதவி தொகையும் வழங்கப்பட்டது. இதனை அவனாசிலிங்கத்தின் துணைவி கிருபாவதி, மகன் அகிலன் சொர்கோ, மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி, தினகரன் நாளிதழ் செய்தி ஆசிரியர் காளிதாஸ் ஆகியோர் வழங்கினர்.

Newsletter

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...