50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தை மாற்றி நடவு செய்யும் பணி வெற்றிகரம்

கோவை: மிகவும் பழமை வாய்ந்த ஆலமரம் வெற்றிகரமாக மாற்றி நடவு செய்யப்பட்டதுடன், அதன் பாகங்களை பிரித்து 100 இடங்களில் நடவு செய்யும் பணி வெற்றிகரமாக நடைபெற்றது.

கோவை: மிகவும் பழமை வாய்ந்த ஆலமரம் வெற்றிகரமாக மாற்றி நடவு செய்யப்பட்டதுடன், அதன் பாகங்களை பிரித்து 100 இடங்களில் நடவு செய்யும் பணி வெற்றிகரமாக நடைபெற்றது.



மாநகரின் புறநகர் பகுதியான கவுண்டம்பாளையம் பகுதியில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் பரந்து விரிந்து வளர்ந்து இருந்தது. இதனை மாற்றி நடவு செய்யும் பணி ஓசை தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, அதன் கிளைகள் வெட்டப்பட்டு, கவுண்டம்பாளையம் சந்திப்பில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாற்றி நடவு செய்யப்பட்டது. மேலும், இதில், வெட்டப்பட்ட கிளைகள் 100 செடிகளாக நடப்பட்டது.



இது குறித்து ஓசை அமைப்பின் கே. சையத் கூறுகையில், "கோவை மாவட்ட நலவாரியம் சார்பில் முதியோர் இல்லம் கட்டுவதற்கு இடையூறாக இருந்ததால், இந்தப் பழமை வாய்ந்த மரத்தை மாற்றி நடவு செய்ய மாற்றி நடவு செய்யப்பட்டது. இந்த மரத்தின் அனைத்து பாகங்களும் பயனுள்ளதாக அமைந்தது. இயற்கைக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் தொண்டு நிறுவனங்களின் உதவியால், துடியலூர் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் நடவு செய்யப்பட்டுள்ளது. நாற்றுகள் தளிர்ந்தவுடன், நிரந்தரமாக நடவு செய்யப்பட உள்ளது."

மேலும், இந்த மரத்தின் இலை, தழைகள் சாடிவயல் யானைகள் முகாமிகள் உள்ள யானைகளுக்கு உணவுக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.



Newsletter

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...