திருப்பூர், நீலகிரியில் போதை பொருள் எதிர்ப்பு தின பேரணி

திருப்பூர்: சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமான இன்று திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

திருப்பூர்: சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமான இன்று திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.



சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருப்பூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தினர். தென்னம்பாளையம் அரசு பள்ளியில் இருந்து பல்லடம் சாலை வழியாக அரசு கலைக்கல்லூரி வரை ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணியை மாநகர காவல் ஆணையர் மனோகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



இதே போல், நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகபிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பு தொடங்கிய இந்த பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சேரிங்கிராஸ் சென்றடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.



Newsletter

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...