திருப்பூர் அருகே 4,500 லிட்டர் போலி கடலை எண்ணெய் பாக்கெட்டுகள் பறிமுதல்

திருப்பூர் : உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், வேனில் கடத்திவரப்பட்ட 1,800 லிட்டர் போலி கடலை எண்ணெய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பூர் : உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், வேனில் கடத்திவரப்பட்ட 4500 லிட்டர் போலி கடலை எண்ணெய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

அன்னூர் - காரணம்பேட்டை சாலையில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர். கே. தமிழ்ச்செல்வன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, TN40 Z 1800 (407) என்ற எண் கொண்ட வாகனம் உணவு பொருள்களை ஏற்றிச்சென்ற போது, சந்தேகத்தின் பேரில் வாகனம் சோதனை செய்யப்பட்டது. அதில், இருந்த எண்ணெய் பாக்கெட்டுகளை ஆய்வு செய்த போது, அவை போலி என்பது தெரிய வந்தது. இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில், கோவை மாவட்டம் அன்னூர் ஏ.எம். காலணி ராஜிவ் பகுதியில் செயல்பட்டு வரும் கணபதி ஆயில் மில்ஸின் எண்ணெய் பாக்கெட்டுக்கள் என்பது தெரியவந்தது. 



'ஓம் கணபதி கடலை எண்ணெய்' என்ற பெயரில் எண்ணெய் பாக்கெட்டுகள் போலியாக தயாரிக்கப்பட்டு, திருப்பூர் நகரில் பல்வேறு பகுதிகளில் சிறிய கடைகளுக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. மேலும், ருக்கி கோல்ட் பாமாலின் ஆயில் 1 லிட்டர் பாக்கெட்டில், முகவரி மற்றும் தயாரிப்பு தேதியும், குறிப்பிடாமல் இருந்தது. பின்னர், அந்த எண்ணெய் பாக்கெட்டுகள் ஆய்வுக்காக உணவு பகுப்பாய்வு துறைக்கு அனுப்பப்பட்டது.

"உணவு பாதுகாப்பு சட்டம் 2006 மற்றும் ஒழுங்கு முறை விதிகளுக்கு முரணாக, மக்களை ஏமாற்றும் வகையில் எண்ணெய் பாக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த நிறுவனத்தின் மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும். பிடிபட்ட 4500 லிட்டர் கடலை எண்ணெயின் மதிப்பு ரூ.3,50,000 ஆகும்," இவ்வாறு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர். கே.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...