நீலகிரியில் தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் மாவட்ட நிர்வாகம்

நீலகிரி: தென்மேற்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீலகிரியில் 35 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி: தென்மேற்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீலகிரியில் 35 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.



நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் பெய்வது வழக்கம். இந்த மழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மழையால் சாலைகளில் மண்சரிவு ஏற்படுவதுடன், மரங்களும் சாய்ந்து விழுகின்றன. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், தென்மேற்கு பருவமழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் உதகையில் நடைபெற்றது. அப்போது, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:– உதகை, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உள்ள புயல் நிவாரண மையங்களை மின் இணைப்புடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சுகாதார மற்றும் மருத்துவ அதிகாரிகள் தேவையான அளவு மருந்து, மாத்திரைகளை இருப்பு வைக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்சுகள், மருத்துவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் பெற வேண்டும்.

நெடுஞ்சாலை, நகராட்சி பகுதிகளில் சாலைகளில் ஏற்படும் மண் சரிவு மற்றும் நிலச்சரிவுகளை உடனுக்குடன் அகற்றும் வகையில் பொக்லைன் எந்திரம் மற்றும் பணியாட்களை தயார்படுத்தி வைக்க வேண்டும். தீயணைப்புத்துறை அதிகாரிகள் மரம் அறுக்கும் மின்வாள் உள்ளிட்ட உபகரணங்கள் செயல்படுகிறதா என்பதை சரிபார்த்து வைத்திருக்க வேண்டும். நீலகிரியில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 233 பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளது. இந்தப் பகுதிகளுக்கு உள்வட்ட வாரியாக ஏற்கனவே 13 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தற்போது தமிழ்நாடு அரசு சுற்றறிக்கையின் படி, ஒவ்வொரு குழுவிற்கும் அதிகபட்சமாக 5 முதல் 7 வரையிலான அபாயகரமான பகுதிகள் ஒதுக்கப்பட்டு, கூடுதலாக 22 குழுக்கள் சேர்க்கப்பட்டு, மொத்தம் 35 குழுக்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுக்கள் நீலகிரி மாவட்டத்தில் ஏற்படும் நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட அனைத்து விதமான பேரிடர்களிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஒரு குழுவில் 7 பேர் இருப்பார்கள். அருகில் உள்ள போலீஸ் நிலையங்களின் தொலைப்பேசி எண்கள் சம்பந்தப்பட்ட குழு அதிகாரிகள் வைத்திருக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...