திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னணியினரின் செயலைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் வரும் 20-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூரில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கூட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், திருப்பூரில் இந்து முன்னணியினர், வீர சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் மாநகர்முழுவதும் சாலைகளை மறித்தும், போக்குவரத்தை நிறுத்தியும் அவசரமாக செல்லும் வாகன ஓட்டிகளை மிரட்டியும் அத்துமீறலில் ஈடுபடுவதாக கூறப்பட்டது.

மேலும், கோல்டன் நகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யு.சி., கொடிக்கம்பத்தை இரவோடு இரவாக அகற்றி விட்டு இந்து முன்னணியின் கொடிக்கம்பத்தை நட்டு கொடியேற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சூழலில், இந்து முன்னணியினரின் போக்கை கண்டித்தும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் கோல்டன் நகர் பகுதியில் வரும் 20-ம் தேதி அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி, ம.தி.மு.க., தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.