நீலகிரி: உதகையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு போக்குவரத்து கழக காப்பீட்டின் கீழ் ரூ.15.75 லட்சத்திற்கான நிவாரண தொகையினை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

உதகையில் 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஒன்பது பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பொதுமக்களை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர் போக்குவரத்து கழக காப்பீடு உதவியாக லேசான காயமடைந்த மூன்று பேருக்கு ரூ.25,000 நிதி உதவியும், பலத்த காயமடைந்த ஐந்து பேருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவியும், விபத்தால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு செயல் பட முடியாமல் போன சாந்தி என்ற பெண்மணிக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
மொத்தம் ரூ.15.75 லட்சத்திற்கான நிதி உதவியை அமைச்சர்கள் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "காயமடைந்தவர்களுக்கு போக்குவரத்து கழக காப்பீட்டு திட்டத்தில் முதன் முறையாக நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரசு அறிவித்த நிவாரண உதவிகள் திங்கட்கிழமை உதகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். உதகையில் தரமற்ற பேருந்துகள் இயக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தவறு. அங்கு தரமான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. அதனால் தான் விபத்துகள் குறைந்துள்ளது." என்றார்.