உதகை பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கினார் அமைச்சர்

நீலகிரி: உதகையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு போக்குவரத்து கழக காப்பீட்டின் கீழ் ரூ.15.75 லட்சத்திற்கான நிவாரண தொகையினை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

நீலகிரி: உதகையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு போக்குவரத்து கழக காப்பீட்டின் கீழ் ரூ.15.75 லட்சத்திற்கான நிவாரண தொகையினை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

உதகையில் 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஒன்பது பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பொதுமக்களை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். 

பின்னர் போக்குவரத்து கழக காப்பீடு உதவியாக லேசான காயமடைந்த மூன்று பேருக்கு ரூ.25,000 நிதி உதவியும், பலத்த காயமடைந்த ஐந்து பேருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவியும், விபத்தால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு செயல் பட முடியாமல் போன சாந்தி என்ற பெண்மணிக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. 

மொத்தம் ரூ.15.75 லட்சத்திற்கான நிதி உதவியை அமைச்சர்கள் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "காயமடைந்தவர்களுக்கு போக்குவரத்து கழக காப்பீட்டு திட்டத்தில் முதன் முறையாக  நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரசு அறிவித்த நிவாரண உதவிகள் திங்கட்கிழமை உதகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். உதகையில் தரமற்ற பேருந்துகள் இயக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தவறு. அங்கு தரமான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. அதனால் தான் விபத்துகள் குறைந்துள்ளது." என்றார்.

Newsletter

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...