வேளாண் பல்கலை.,யில் மாணவர் சேர்க்கைக்கு முதன் முறையாக இணையதள வழி கலந்தாய்வு

கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு முதல் முறையாக இணையதள வழியாக நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு முதல் முறையாக இணையதள வழியாக நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கே.ராமசாமி கூறியதாவது :- 

மே மாதம் 18-ம் தேதி முதல் இளமறிவியல் பட்டப்படிப்பு விண்ணப்பத்தை இணையதளம் மூலமாக பதிவேற்றும் முறை தொடங்குகிறது. ஜூன் மாதம் 17-ம் தேதி முடிவடைகிறது. அதன் பின் ஜூன் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். 22-ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு ஜூலை 7-ம் தேதி சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும்.



முதல் முறையாக இணையதள வழியாக ஜூலை 9 முதல் 13 வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. பின்னர், 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும். தொழில் கல்விக்கான கலந்தாய்வு ஜூலை 16 அன்றும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மற்றும் நிறுவனங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும். மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதே மாதம் 1-ம் தேதி கல்லூரி தொடங்கும். 

கலந்தாய்வு 

இணையதள வழியாக நடைபெறும் கலந்தாய்வில் சிலைடிங் (Sliding) முறை அறிமுகப்படுத்தவுள்ளது. இதனால் மாணவர்கள் கலந்தாய்வில், இடங்கள் இருந்தால் தங்கள் விருப்பத்தின் படி மாற்றிக்கொள்ளலாம். தனியார் கல்லூரிகளில் 65 சதவீதம் இடங்கள் பல்கலைக்கழகம் மூலமாக நிரப்பப்படும். 35 சதவீத இடங்கள் அந்தந்த கல்லூரிகளிலேயே நிரப்பப்படும். இதில் முறைகேடுகள் ஏற்பட்டால் அந்தந்த கல்லூரி நிர்வாகமே பொறுப்பு. இளையதள வழியாக கலந்தாய்வு நடைபெற உள்ளதால் யாரும் கோவைக்கு வரவேண்டியதில்லை. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும் வகையில் வரும் 21-ம் தேதி திறந்த வெளி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...