எத்தனை பேரை காவு வாங்க காத்திருக்கின்றன பேருந்து நிலையங்கள்..?

கோவை: தமிழகத்தில் அரசு சார் கட்டிடங்களின் நிலைகள் நாம் நன்கு அறிந்ததே. எப்போது இடிந்து விழுமோ? என்ற பீதியிலேயே இன்று பல அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள் அச்சப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவ்வப்போது, பாழான தனியார் கட்டிடங்களை மட்டும் இடித்து தரைமட்டமாக்கி நிர்வாகம் முறையாக செயல்படுவதாக அரசு மார் தட்டிக் கொண்டு வருகிறது. அதே சூழலில், அரசு கட்டிடங்கள் மீது கை வைக்கத் தயக்கம் காட்டுகின்றனர் அதிகாரிகள்.

கோர விபத்து

சாலையோரம் உள்ள மக்களுக்கும், அரசு நிலத்தில் பட்டா இன்றி வாழும் மக்களுக்கும் குடிசை மாற்று வாரியம் சார்பில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது. ஆனால், பொது கட்டிடங்களை மறு சீரமைப்பு செய்வதில் அரசு முனைப்பு காட்டுவதில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம தேதி கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சோமனூரில் உள்ள பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.



இந்த கோர விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய், காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாய் என வழக்கம்போல தமிழக அரசு நிவாரணத் தொகையை அறிவித்தது.

கொதிப்பு

விபத்து காரணமாக கொதிப்படைந்த மக்கள், "நூற்றுக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் பேருந்து நிலையத்தைக் கூட முறையாக பராமரிக்க இந்த அரசுக்கு துப்பு இல்லையா?" என்று கண்டனக் குரல்கள் எழுப்பினர். மேலும், மற்ற பேருந்து நிலையங்களை முறையாக ஆய்வு செய்து, இடிந்து விழும் நிலையில் உள்ள பேருந்து நிலையங்களை புதுப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. நாள்பட அத்தனை கண்டனக் குரல்களும் காணாமல் போக, வழக்கம் போல் இயங்க ஆரம்பித்தது அரசு இயந்திரம்.

சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த பீதியில், பழைய பேருந்து நிலையங்களுக்கு முட்டுக் கொடுக்கும் பணியை தொடர்ந்தனர் அதிகாரிகள். விபத்து நடந்த அடுத்த சில நாட்களில் சூலூரில் உள்ள பழைய பேருந்து நிலையத்திற்கு இரும்பு கம்பிகளால் முட்டுக் கொடுத்து நிறுத்தினர். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. "பழைய பேருந்து நிலையங்களை இடித்து, புதுப்பிப்பதை விட்டுவிட்டு இப்படி முட்டுக் கொடுத்து நிறுத்துறாங்களே, எங்க போய் முடிய போகுதோ.!" என்று அலுத்துக்கொண்டது மக்கள் மனம்.



மீண்டும்-மீண்டும்

இந்த நிலையில், நேற்று பெய்த கனமழைக்கு பல்லடம் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் மழைக்காக ஒதுங்கி நின்று கொண்டிருந்த அசோக் (38) என்ற கட்டிடத் தொழிலாளி உயிரிழந்தார். மேலும், ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். மேலும், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர், நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டுச் சென்றனர்.

இப்படி மீண்டும்-மீண்டும் இடிந்து விழும் பேருந்து நிலையங்கள் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க காத்திருக்கின்றது என்பது தெரியவில்லை. விபத்து நடந்த பின் நிவாரணம் வழங்கி கண்ணீர் வடிப்பது, கோடிகள் செலவு செய்து மணி மண்டபங்கள் அமைப்பது போன்ற தார்மீக பணிகளை செய்து வரும் தமிழக அரசு, "மழை வந்தால் பேருந்து நிலையத்தின் அருகில் நிற்காதீர்கள்..!" என்ற அறிவிப்பை மட்டும் தான் இன்னும் வெளியிடவில்லை.



Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...