காவரி பிரச்சனையை திசைதிருப்பவே பெரியார் சிலை குறித்த சர்ச்சை: கமல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை திசை திருப்பவே பெரியார் சிலை விவகாரம் குறித்த சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை திசை திருப்பவே பெரியார் சிலை விவகாரம் குறித்த சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:- பெரியார் பற்றி சிலர் கலக வார்த்தைகள் சொல்கிறார்கள். அந்த கலக வார்த்தைகள் ஏன் பேசப்படுகிறது என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தற்போது முயற்சி நடந்து வருகிறது. ஆனால், அந்த முயற்சியை திசை திருப்பும் வகையில் இந்தப் பெரியார் சிலை விவகாரத்தை எழுப்பி இருக்கிறார்கள். பெரியார் சிலையை யாரும் தொட்டு விட முடியாது. பெரியாரை தமிழர்கள் பார்த்துக் கொள்வார்கள். பெரியார் உச்சம் மிக உயரமானது. அதை தொட்டு விட முடியாது.

பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு தேவையில்லை. பெரியார் பற்றி விமர்சனம் செய்பவர்களுக்குத்தான் பாதுகாப்பு தேவை. எச்.ராஜா வருத்தம் தெரிவித்து இருப்பதை என்னால் ஏற்க முடியாது. அவர் சொன்ன வார்த்தையை திருப்பி எடுத்தாலும் காயம் காயம்தானே. இது மத்திய அரசின் தூண்டுதலாக கூட இருக்கலாம். இப்போது அவர்கள் அதற்கும், எங்களுக்கும் சம்பந்தமும் இல்லை என்கிறார்கள். எச்.ராஜா மீது பா.ஜனதா கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...