குப்பைகளின் புகலிடமான கௌசிகா நதி: புத்துயிர் பெறுமா..? என சமூக ஆர்வலர்கள் ஏக்கம்

கோவையில் வறண்டு கிடக்கும் மிகவும் புகழ்பெற்ற கௌசிகா நதி, தற்போது குப்பைக் குளங்களின் கூடாரமாக மாற்றப்படுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவையில் வறண்டு கிடக்கும் மிகவும் புகழ்பெற்ற கௌசிகா நதி, தற்போது குப்பைக் குளங்களின் கூடாரமாக மாற்றப்படுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கோவை மாவட்டம் அன்னுர் தாலூக்காவுக்கு உட்பட்டது கோவில்பாளையம் பகுதி. வரலாற்று சிறப்புமிக்க இந்த ஊர் முற்காலத்தில் கௌசிகா புரி என்று அழைக்கப்பட்டுள்ளது .இங்கு ஓடும் ஆற்றுக்கு கௌசிகா நதி என முன்னோர்கள் பெயரிட்டு வணங்கத்தக்க நதியாகப் போற்றி வந்தனர். தற்போது, கோவில்பாளையத்தில் கௌசிகா நதி முழுக்க முழுக்க குப்பை கொட்டும் இடமாக மாற்றி உள்ளனர். பெரும்பாலும் கல்யாண மண்டபங்களில் குவியும் கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளால், ரசாயன கழிவுகள் கொட்டப்பட்டு, தற்போது குப்பைக் கிடங்காக காட்சியளிக்கிறது. 

எனினும், ஒரு சில சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளின் உதவியால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 50 ஜே.சி.பி. இயந்திரங்களின் மூலம் சுமார் 5 கி.மீ. தொலைவிற்கு சீமைகருவேல மரங்கள் அழிக்கப்பட்டன. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாத காரணங்களால் மீண்டும் கௌசிகா நதி அதன் தன்மையை இழந்து கிடக்கிறது. குப்பைகள் மற்றும் கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கௌசிகா நதி தற்போது, இருந்த தடம் தெரியாத அளவிற்கு சீரழிந்துகிடக்கிறது.

இந்த நிலையில், கௌசிகா நதி மேம்பாட்டு சங்கம் சார்பில் கோவில்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் சமூக ஆர்வலர்கள் முறையிட்டனர். உடனே அவர் களத்தில் சென்று பார்த்து, இந்தக் கழிவுகளை இரண்டு நாட்களுக்குள் அகற்றி தருவதாக கூறினார். இனிவரும் காலங்களில் குப்பை கொட்டும் திருமண மண்டபங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தனித்தனியாக நோட்டீஸ் வழங்க அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டார். மேலும், கௌசிகா நதியில் குப்பை கொட்டும் வாகனங்களைக் காவல்துறை உதவியுடன் பறிமுதல் செய்தல் மற்றும் தொடர்ந்து குப்பை கொட்டுவதை தடுக்கும் பொருட்டு கோவை - சக்தி சாலை பாலத்தில் முள்வேலி தடுப்பு அமைக்க நடவடிக்கைள் எடுக்கப்போவதாகவும் கூறினார்.

இவையெல்லாம் தாண்டி இனியும் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி நாம் விழிப்புணர்வு கொள்ளவில்லை எனில் நதி மட்டும் நாறாது நாமும்தான்..!



Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...