களிறு திட்டம் குறித்து மேட்டுப்பாளையம் மக்களுக்கு விளக்கம்

யானை மனித முரண்பாடுகளை கையாளுவது குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் விவசாயிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.

கோவை: யானை மனித முரண்பாடுகளை கையாளுவது குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் விவசாயிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் மலையோர கிராமங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காட்டுயானைகள் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் நுழைந்து அதிக அளவில் சேதங்களை ஏற்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எதிர் வரும் கோடை காலத்தில் வனங்களில் ஏற்படும் வறட்சி காரணமாக இப்பிரச்சனை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகம் உள்ளதாக 45 கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 19 கிராமங்கள் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கிராமங்கள் ஆகும். 

இதனைக் கருத்தில் கொண்டு இப்பகுதியில் தொடரும் யானை மனித மோதல்கள் மற்றும் இதனால் ஏற்படும் பயிர் மற்றும் உயிர்ச்சேதங்கள் தவிர்த்தல் குறித்து இன்று மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் வனத்துறை, வருவாய்துறை, வேளாண்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் விவசாயிகள் வன உயிரின ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. 

இதில் வனவிலங்குகளின் கூடுறுவலை தடுக்கும் விதம் குறித்தும், அவற்றால் ஏற்படும் சேதங்களுக்கு உரிய இழப்பீடு பெறுவது குறித்தும், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. விவசாய விளைநிலங்களில் தேனீகள் வளர்ப்பது, யானை போன்ற விலங்குகளுக்கு பிடித்தம் இல்லாத பயிர்களை நடவு செய்வது போன்றவை இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு கான உதவும் என்ற கருத்துக்கள் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 

விவசாயத்தை தவிர்த்து வனம் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாப்பது என்பது என்ற திட்டம் சரியானது அல்ல, வேளாண்மையைச் சார்ந்தே இயற்கை வளமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே மனித யானை மோதலைத் தவிர்க்க கொண்டு வரப்பட்ட களிறு திட்டத்தின் நோக்கமாகும் என்று வனத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்குத் தெளிவு படுத்தினர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...