பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டி: 272 பேர் பங்கேற்பு

பொள்ளாச்சி தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் 272 வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கோவை: பொள்ளாச்சி தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் 272 வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பொள்ளாச்சி தனியார் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் போட்டியில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இருந்தும் கேரள மற்றும் கர்நாடகாவில் இருந்தும் 272 பேர் பங்கேற்றனர்.



எடை வாரியாக நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றவர்கள் தங்களது திறமைகளை மேடையில் அரங்கேற்றினர். 55 கிலோ எடை வரை ஒரு பிரிவாகவும், 55 முதல் 65 கிலோ எடை, 65 முதல் 75 கிலோ எடை, 75 முதல் 85 கிலோ எடை, 85 க்கும் மேல் என்று பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. 

இந்த பிரிவுகளில் முதல் இடம் பிடித்த ஆணகழனுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கமும், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம் ரொக்கமும், மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு கேடயமும் வழங்கப்பட்டது.

அனைத்துப் பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு ஓப்பன் கேட்டகிரி போட்டி நடத்தப்பட்டது. அதில் முதல் பரிசு பெற்றவருக்கு இருசக்கர வாகனமும், இரண்டாம் பரிசு பெற்றவருக்கு குளிர்சாதன பெட்டியும் வழங்கப்பட்டது. 

இந்த மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் பூனேவில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.

பொள்ளாச்சியில் முதன் முறையாக ஆணழகன் போட்டி நடைபெற்றதால் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியைக் கண்டு ரசித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...