தற்கொலைகளைத் தடுப்பது குறித்து திருப்பூரில் இன்று காலை கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
திருப்பூர்: தற்கொலைகளைத் தடுப்பது குறித்து திருப்பூரில் இன்று காலை கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை இன்று காலை மாநகர காவல்துறை துணை ஆணையர் கயல்விழி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாறுவேடம் அணிந்த கல்லூரி மாணவர்கள் தற்கொலை வேண்டாம் என்பது குறித்த நாடகம் நடத்தி சக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மாணவர்கள் நடத்திய சைக்கிள் பேரணி சிக்கண்ணா கல்லூரியில் தொடங்கி, புஷ்பா தியேட்டர் வரை சென்று முடிந்தது, இந்த விழிப்புணர்வு பேரணியில், ‘தற்கொலை ஒரு கோழைத்தனம்’, ‘தனிமையைத் தவிர்ப்போம்’, ‘தற்கொலையை வென்றெடுப்போம்’ போன்ற விழிப்புணர்வு பதாகைகளையும் ஏந்திச்சென்றனர்.