கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச வழக்குகள், வங்கி கடன், மோட்டார் வாகன விபத்து, சொத்து தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டு சமரசமாக முடிக்கப்படும். நீதிமன்ற கட்டணம் திருப்பி வழங்கப்படும் என சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி (சனிக்கிழமை) தேசிய அளவிலான லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.




கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், மதுக்கரை மற்றும் அன்னூர் ஆகிய நீதிமன்ற வளாகங்களில் இந்த மக்கள் நீதிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




இதில், ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன், கல்வி கடன் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் விசாரிக்கப்படும்.




மேலும், விவாகரத்து தவிர்த்து மற்ற குடும்ப பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள், நிலம், சொத்து, பாகப் பிரிவினை, வாடகை விவகாரங்கள், விற்பனை, வருமானம் மற்றும் சொத்து வரி பிரச்னைகள் போன்ற வழக்குகள் விசாரித்து சமரசமாக முடிக்கப்படும் என சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.




மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துகொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. மக்கள் நீதிமன்றம் மூலம் முடித்துகொள்ளப்படும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பி வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.




நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் மற்றும் கடன் வசூல் வழக்குகளுக்கும் இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்படும். இதுபோன்ற வழக்குகளுக்கு தீர்வு எட்ட, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் டிசம்பர் 1ம் தேதி முதல் மாவட்ட நீதிபதிகள் தலைமையில் சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.




இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...