விளையாட்டு வீரர்களுக்கான சலுகைகள், திட்டங்களை அறிவித்த ஏ.ஏ.ஐ.

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சலுகைகள் மற்றும் திட்டங்களை இந்திய விமானக் கட்டுப்பாட்டு அலுவலகம் (ஏ.ஏ.ஐ) அறிவித்துள்ளது.

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சலுகைகள் மற்றும் திட்டங்களை இந்திய விமானக் கட்டுப்பாட்டு அலுவலகம் (ஏ.ஏ.ஐ) அறிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் பேட்மிண்டன், செஸ், கோ-கோ, டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக சப்-ஜுனியர், ஜுனியர், சீனியர் அளவில் தேசிய சாம்பியன்ஷிப் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கான ஒரு அறிவிப்பை இந்திய விமானக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மேற்கண்ட போட்டிகளில், விதிமுறைகளுக்குட்பட்டு தகுதியான வீரர்களைத் தேர்வு செய்து, இந்திய விமானக் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு கீழ் உள்ள அணிகளில் விளையாட அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு, தேவையான பயணப்படிகள், மாதப்படிகள் என அனைத்து செலவுகளுக்கும் தொகை வழங்கப்படும். 

இதேபோல, 14 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய விமானக் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு கீழ் உள்ள அணிகளில் விளையாடி வருபவர்கள், விமானப் போக்குவரத்து துறையில் தற்காலிக ஊழியர்களாகவும் பணியமர்த்தப்படுவர். பின்னர், திறமை மற்றும் பணி வாய்ப்பின் அடிப்படையில் நிரந்தர ஊழியர்களாக பணிமாற்றம் செய்யப்படுவர். தகுதியுடையவர்கள் இதற்கான விண்ணப்பத்தை 19-ம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...