இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் இயற்கை அறிவியல் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.
கோவை, ஜனவரி 23
இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் இயற்கை அறிவியல் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.
கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மாணவர்களிடையே இதனைக் கொண்டு செல்லும் நோக்கில் கோவையில் இயற்கை அறிவியல் நிறுவனம் துவக்கப்பட்டது. இதற்கான துவக்க விழா கோவை சித்தாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிறுவன தலைவர் ராஜலட்சுமி ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கோவை பாரதியார் பல்கலை கழக துணைவேந்தர் முனைவர் கணபதி விழா மடலை வெளியிட்டுப் பேசினார். இதில், இயற்கை, விவசாயம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவை குறித்த விழிப்புணர்வை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம் என்றும், பல்வேறு இயற்கையை பாதுகாப்பது குறித்த போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் இந்நிறுவனத்தின் மூலமாக வழங்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். பின்னர், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் கணபதி இது போன்ற முயற்சிகளை தாம் வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.