அனைத்து உணவு வணிகர்களும் டிச.31-க்குள் கட்டாயம் உரிமம் பெற வேண்டும்- ஆட்சியர்


கோவை, டிசம்பர் 13

கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து உணவு வணிகர்களும் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் கட்டாயம் உரிமம் அல்லது பதிவு செய்யப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு. டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006ன் கீழ் உணவு பொருள் வணிகர்கள் உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் மற்றும் பதிவுகள் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி உணவு பொருள் தயாரிப்பவர்கள், இருப்பு வைப்பவர்கள், விநியோகம் செய்வோர், உணவு விடுதிகள், ஓட்டல், பேக்கரிகள், தள்ளு வண்டிகள் உள்ளிட்ட உணவு விநியோகிக்கும் வாகனங்கள், இறைச்சி கடைகள் உணவு கையாளும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இச்சட்டத்தின் கீழ் உரிமம் மற்றும் பதிவு செய்தல் வேண்டும்.

வருடாந்திர வியாபாரம் ரூ.12 லட்சத்திற்கு கீழ் வியாபாரம் செய்வோர் ரூ.100 செலுத்தி அந்தந்த பகுதியில் உள்ள பொது சேவை மையங்களின் மூலம் பதிவு செய்து உடனடியாக சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். ரூ.12 லட்சத்திற்கு மேல் வியாபாரம் செய்யும் தயாரிப்பாளர் தவிர பிற வியாபாரிகளுக்கு ரூ.2000 கட்டணமாகும். தயாரிப்பாளர்களுக்கு ரூ.3000 மற்றும் ரூ.5000 தயாரிப்பு அளவைப் பொறுத்து கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு அந்தந்த பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்களை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் அலுவலகத்தில் நேரடியாக தொடர்பு கொண்டும், மாவட்ட நியமன அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம். அல்லது, www.fssai.gov.in என்ற இணையதளத்திலும் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

பொதுமக்கள், உணவுப் பொருள் விற்பனை சம்பந்தமான புகார்களுக்கு 94440 42322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும், [email protected] என்ற இ-மெயில் வழியாகவும் புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...