SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. கொங்கு மண்டல மாவட்டங்களில் கோவை 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளது.


கோவை: 2026 மார்ச்/ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற தமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57% தேர்ச்சி விகிதத்துடன் மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றது. சிவகங்கை 97.54 சதவீதம் தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், தஞ்சாவூர் 97.41 சதவீதம் தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

கொங்கு மண்டல மாவட்டங்களில் கோவை மாவட்டம் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் சிறப்பிடம் பிடித்து மாநில அளவில் 7-வது இடத்தை பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 37,844 மாணவர்களில் 36,742 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் 97.03 சதவீதம் தேர்ச்சி விகிதத்தையும், திருப்பூர் 96.28 சதவீதம் தேர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. நீலகிரி மாவட்டம் 96.32 சதவீதம் மற்றும் நாமக்கல் 96.01 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன.

சேலம் மாவட்டம் 94.21 சதவீதம் தேர்ச்சியையும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் முறையே 93.94 சதவீதம் மற்றும் 89.43 சதவீதம் தேர்ச்சி விகிதத்தையும் பதிவு செய்துள்ளன.

மாநிலம் முழுவதும் போலவே, கொங்கு மண்டல மாவட்டங்களிலும் மாணவிகள் தொடர்ந்து மாணவர்களை விட அதிக தேர்ச்சி விகிதம் பெற்று முன்னிலை வகித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.31 சதவீதம் ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவிகள் 96.47 சதவீதம் தேர்ச்சியும், மாணவர்கள் 92.15 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...