கிறிஸ்துவ தேவாலயத்தை அடித்து நொறுக்கிய இந்து முன்னணியினர் - பாதிரியார் உள்பட 5 பேர் படுகாயம்


கோவை, டிசம்பர் 9

கோவை அருகே கிறிஸ்துவ தேவாலயத்தை இந்து முன்னணியினர் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், பாதிரியார் உள்பட ஐந்து பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



மத்தம்பாளையம் அருகே கோட்டைப்பிரிவு பகுதியில் பெந்தகோஸ்தே சபை தேவாலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அப்பகுதியிலுள்ள ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 



தேவாலயத்தின் அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் தேவராஜ் என்பவரது வீடு உள்ளது. அவரது வீட்டில் கூடியிருந்த கவிதா, சந்திரசேகரன் உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணியினர், தேவாலயத்தில் உள்ளே புகுந்து சுவரில் பதித்திருந்த ஆளுயர கண்ணாடி மற்றும் மேசை, நாற்காலிகள் உட்பட பல பொருட்களை அடித்து உடைத்தனர். 



அதோடு, அங்கு இருந்த போதகர் கார்த்திக்கை பயங்கரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், அந்தக் கும்பலால் தாக்கப்பட்ட ஐந்து பேரில் ஒரு பெண்ணுக்கு கண் அருகே பலத்த காயம் ஏற்பட்டது. 



இதனையடுத்து, தகவலறிந்து போலீஸார் வருவதற்குள், காவி கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.  இந்த சம்பவம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த 

சசிகுமார், செல்வம், சந்திரசேகர், கவிதா மற்றும் வினோத்குமார், ஜெயதேவ் ஆகிய 6 பேரை போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.



தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்கள்  கோவை அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...