பார்கிங் வசதியில்லாமல் தவிக்கும் வாகன ஓட்டிகள்; மல்டிலெவல் பார்க்கிங் வசதியை ஏற்படுத்த கோரிக்கை

கோவை, நவம்பர் 2௦

கோவை மாநகரில் பல இடங்களில் வாகனங்களை நிறுத்த பொதுமான இட வசதியில்லாத காரணத்தினால் பொதுமக்கள் அவதி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மல்டிலெவல் பார்க்கிங் வசதி திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி பொதுமக்கள் கோரிக்கை.



கோவை மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என சுமார் 15 லட்சம் வாகனங்கள் கோவை மாநகரின் பிரதான சாலைகளான காந்திபுரம், டவுன்ஹல், உக்கடம், ரயில்நிலையம் போன்ற பகுதிகளில் இயங்குகின்றன. மேலும், ஆண்டுதோறும் புதிதாக 1.5 லட்சம் வாகனங்கள் கோவை மாநகரில் பதிவு செய்யப்படுகின்றன. 



வாகனங்களின் எண்ணிக்கை காரணமாக போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. கோவை மாநகர பேருந்து நிலையங்கள், ரயில்நிலையம், வணிக வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், உணவு விடுதிகள், மருத்துவமனைகள் என வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தி சென்று விடுகின்றனர். இதற்கு பிரதான காரணமாக அவர்கள் வைக்கும் புகார் வாகன நிறுத்தம் வசதி போதிய அளவு இல்லை என்பதே.

கோவை அவிநாசி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை, நஞ்சப்பா சாலை, பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட சாலைகளின் ஓரம் வாகனங்கள் அதிக அளவு நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அலுவலகம் செல்ல கால தாமதம் ஏற்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். 



இது குறித்து எல். ராஜ்குமார் கூறுகையில் " வணிக வளாகங்கள், கடைகள், வீடுகள் போன்றவை அதிக அளவு கோவை மாநகரில் உள்ளது. ஆனால் அதற்கேற்ப வாகன நிறுத்தம் செய்யும் வசதி அந்த கட்டடங்களில் போதுமானதாக இல்லை.இதன் காரணமாகவே சாலை ஓரங்களில் வாகனங்களை மக்கள் நிறுத்தி செல்லும் சூழ்நிலை உருவாகிறது. கட்டடங்களின் கட்டுமான பனியின் போதே வாகன நிறுத்தம் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும்" என்றார்.

கோவை மாநகரில் பல இடங்களில் வாகனங்களை நிறுத்த குறிப்பிட்ட இடங்களை காவல்துறையினர் ஒதுக்கியுள்ளனர். ஆனால், அவை போதுமானதாக இல்லை. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வாகன நிறுத்துமிடங்களை ஏற்படுத்தியிருந்தாலும் வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி இல்லை. இதற்கு தீர்வாக பல்அடுக்கு (மல்டிலெவல்) பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் சுஜித் குமார் கூறுகையில் " தற்போது பார்கிங் பிரச்சனைகளை போக்க நகரின் பல பகுதிகளில் ஒன் வே பார்கிங் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் தரைதளம் பார்கிங் வசதிக்காக கட்ட வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் கட்டட உரிமையாளரிடம் வலியுறுத்த வேண்டும். பழைய கட்டடங்களில் பார்கிங் வசதி இல்லாத காரணத்தினால் பார்கிங்க்கு என இடம் ஒன்று ஒதுக்கி வாகனங்களை அதில் நிறுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. மல்டிலெவல் பார்க்கிங் திட்டம் விரைந்த செயல்படுத்த மாநகராட்சி அதிகாரியிடம் வலியுறுத்தப்படும்," என்றார்.

“2014-ம் ஆண்டு கோவை மாநகரின் வளர்ச்சிக்காக தமிழக அரசாங்கத்தால் ரூ.2௦௦௦ கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில், தனியார் பங்களிப்புடன் கோவை மாநகர பகுதிகளில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை இத்திட்டம் செயல்படுத்தவில்லை,” என சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.

கோவை மாநகரின் பார்கிங் பிரச்சனைகளை போக்க இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...