ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத்துடன் பிஎஸ்ஜி கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை, நவம்பர் 16

கோவையில் உள்ள பிஎஸ்ஜி கல்வி நிறுவனம் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த கிளஸ்கோ கலிடோனியன் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. 

இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் முன்னணிக் கல்வி நிறுவனமாக ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிளஸ்கோ கலிடோனியன் பல்கலைக்கழகம் திகழ்ந்து வருகிறது. இளநிலை, முதுநிலைப் படிப்புகளுக்கான பயிற்சி மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு என பலதுறைகளில் இந்தப் பல்கலைக்கழகம் தீவிரம் காட்டி வருகிறது. லண்டன், ஓமன், வங்கதேசம் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் இதன் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் பிஎஸ்ஜி கல்விக்குழுமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கிளஸ்கோ கலிடோனியன் பல்கலைக்கழகத்தில் 2 வார கால பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். 

இதன் ஒருபகுதியாக, கிளஸ்கோ கலிடோனியன் பல்கலைக்கழகமானது, கோவையில் இயங்கி வரும் பிஎஸ்ஜி கல்வி நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம். அதன்படி, மாணவர்களுக்கு கல்வி பயிலும் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது, இரு கல்வி நிறுவனங்களுக்கு இடையே ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து கொள்வது,  ஜவுளி, ஃபேஷன், உயிரியல் மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவைகளில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரு தரப்பினரிடையே சர்வதேச அளவில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டுத் திட்டங்களை செயல்படுத்துகிறது. இரு கல்வி நிறுவனங்களிடையிலான ஒப்பந்தத்தில் கிளஸ்கோ கலிடோனியன் பல்கலைக்கழகத்தின் துணை முதல்வரும், பிஎஸ்ஜி கல்லூரியை பார்வையிட வந்த 4 பேர் கொண்டக் குழுவின் தலைவருமான ஜீனைன் கிரிகெர்சன் - ஹெர்மன்ஸும், பிஎஸ்ஜி சார்பில் அதன் இயக்குநர் பி. ராதாகிருஷ்ணன் கையெழுத்திட்டனர். 

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...