ஒரே வண்டியில் மூன்று பிரேதங்களை எடுத்துச்செல்ல நிர்பந்திப்பதை கண்டித்து அமரர் ஊர்தி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, நவம்பர் 13: 

ஒரே வண்டியில் மூன்று பிரேதங்களை எடுத்துச்செல்ல வலியுறுத்தும் செஞ்சிலுவைச்சங்க நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு அமரர் ஊர்தி வாகன ஓட்டுனர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்போரை அவரவர் வீட்டிற்கு கொண்டு செல்ல இலவச அமரர் ஊர்தி சேவை செயல்பட்டு வருகிறது. இந்த அமரர் ஊர்தி சேவையை செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. 

சமீபகாலமாக அரசின் அமரர் ஊரிதியில் ஒரே நேரத்தில் மூன்று பிரேதங்களை எடுத்துச்செல்வதாக புகார் எழுந்தது. இந்த சூழலில் மாவட்ட திட்ட உதவியாளர் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் நிர்பந்தத்தினால் தான் இது போன்ற அவலம் ஏற்படுகிறது என்றும், முறையான ஊதியம் தராமல் அலைக்கழிக்கப்படுவதாகவும் கூறி அரசு அமரர் ஊர்தி வாகன ஓட்டுனர்கள் இன்று காலை கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து அமரர் ஊர்தி ஓட்டுனர் சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கோவையில் 10 அமரர் ஊர்திகள் உள்ளன. ஆனால், 2 மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அதிக அளவில் பிரேதங்கள் வரும்போது அவற்றை மொத்தமாக அரசு வாகனத்தில் ஏற்றி அனுப்புகின்றனர். இதனால், ஓட்டுனர்களுக்கும் பிரேதத்தின் உறவினர்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பலமுறை அவர்களால் ஓட்டுனர்கள் தாக்கப்படுகின்றனர்.

அதோடு, 525 ரூபாய் ஊதியம் தருவதாக கூறிவிட்டு தற்போது வெறும் 215 ரூபாய் மட்டுமே ஊதியமாக கொடுக்கின்றனர். பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வரும் செஞ்சிலுவை சங்க நிர்வாகம் ஓட்டுனர்களின் உழைப்பை திருடுகின்றது. இதைத்தடுக்க வலியுறுத்தியே ஆர்ப்பாட்டம் நடத்தினோம். உடனடியாக மாவட்ட நிர்வாகம் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என எதிர்ப்பார்த்திருக்கிறோம்.



இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...