53-வது வார்டு பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்

கோவை, நவம்பர் 2 : கோவை மாவட்டத்தின் 53-வது வார்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையர் டாக்டர்.கே.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். 

தமிழகம் முழுவதும் பரவி வரும் டெங்கு காய்ச்சலால், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 



இதன் ஒருபகுதியாக, மத்திய மண்டலம் 53-வது வார்டுக்குட்பட்ட வி.கே.கே. மேனன் ரோடு, ஆவாரம்பாளையம் பகுதியில் டெங்கு தடுப்பு மற்றும் ஒழிப்பு பணிகளை விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். அப்போது, குடியிருப்புகளின் நீர் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகின்றனவா என்பதைப் பார்வையிட்ட அவர், ஆவாரம்பாளையம் பகுதியில் தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள பழைய டயர்கள் மற்றும் தேவையற்ற பொருட்களைச் செய்து, சம்பந்தப்பட்ட நபருக்கு அபராதம் விதிக்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

இதைத்தொடர்ந்து, அதேபகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்திலுள்ள குப்பைகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களைக் கொண்டு அகற்ற உத்தரவிட்டதோடு, குப்பைகளைத் தேக்கிய சம்பந்தப்பட்ட நபருக்கு அபராதம் விதிக்குமாறு அவர் அறிவுறுத்தினார். 

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி துணை ஆணையர் திருமதி.ப.காந்திமதி, நகர்நல அலுவலர் டாக்டர்.க.சந்தோஷ்குமார், மத்திய மண்டல உதவி ஆணையர் திரு. அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...